For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒடிஷாவில் ரோட்டில் திரிந்த பசுவை அடித்து தூக்கிய அமித்ஷா கார்!

ஒடிஷாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பசுவை அடித்து தூக்கியது அமித்ஷாவின் வாகனம்.

By Mathi
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிஷாவில் சாலையில் போய்க் கொண்டிருந்த பசுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவின் பாதுகாப்புக்கு சென்ற கார் அடித்து தூக்கியது.

ஒடிஷா மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா புதன்கிழமையன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த பசு மாடு மீது அமித்ஷாவின் பாதுகாப்புக்கு சென்ற கார் ஒன்று படுவேகமாக மோதியது.

படுகாயமடைந்த பசு

படுகாயமடைந்த பசு

இதில் பசுமாடு படுகாயமடைந்தது. நாடு முழுவதும் பாஜகவினர் பசுக்களைப் பாதுகாப்போம் என கூறிக் கொண்டு அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழனியில் மதமோதல்

பழனியில் மதமோதல்

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அடித்தே கொலை செய்கிற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அண்மையில் பழனியில் விவசாயத்துக்கு மாடுகளை கொண்டு சென்ற விவசாயி ஒருவரிடம் வம்பு செய்து மத மோதலை உருவாக்கியிருந்தனர்.

பிஜூ ஜனதா தளம்

பிஜூ ஜனதா தளம்

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பாதுகாப்புக்கு சென்ற வாகனமே சாலையில் சென்ற பசுவை அடித்து தூக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தை ஒடிஷா பிஜூ ஜனதா தளம் கையிலெடுத்து விளாசி வருகிறது.

பாஜக விளக்கம்

பாஜக விளக்கம்

அதேநேரத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்த பாஜக மூத்த தலைவர் பிரதாப் சாரங்கி, அமித்ஷாவின் பாதுகாப்புக்கு வந்த வாகனம்தான் மோதியது. உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தோம். அவரும் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். போலீசாரும் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பசுமாட்டுக்கு சிகிச்சை அளித்தனர் என விவரித்துள்ளார்.

English summary
A vehicle in the motorcade of BJP president Amit Shah hit a cow during his visit to Jajpur district in Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X