வீடியோ ஆல்பம்.. அரைகுறை ஆடையுடன் அமிதாப்புடன் ஆட்டம்போட்ட மகாராஷ்டிரா முதல்வர் மனைவி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் மியூசிக் ஆல்பம் ஒன்றிற்காக பாட்டுப்பாடி ஆட்டம் போட்டுள்ளார் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி, அம்ருதா.

அம்ருதாவின் ஆட்டம் இப்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையையும், சிலரிடமிருந்து வரவேற்பையும் ஒரே நேரத்தில் ஈட்டித் தந்துள்ளது. பூசன் குமார் தயாரிப்பில், அகமது கான் இயக்கத்தில், 'பிர்சே' என்ற பெயரில் இந்த மியூசிக் ஆல்பம் தயாராகியுள்ளது.

மும்பையின் பிரபலமான ஓபரா ஹவுசில் வைத்து இந்த சூட்டிங் நடந்துள்ளது. அதை அமிதாப்பச்சன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். படத்தையும் வெளியிட்டுள்ளார்.

வீடியோ சூட்டிங்

கான்செப்ட்படி, அமிதாப்பச்சன், டான்ஸ் அகாடமி தலைவராகும். அவரிடம் சான்ஸ் கேட்டு அம்ருதா வருவதை போல காட்சி அமைக்கப்பட்டிருந்ததாம். ஹை-ஹீல்ஸ் செருப்பு அணிந்து, முட்டிக்கு மேல் வரையிலான ஒரு குட்டி ஆடையை போட்டுக்கொண்டு அமிதாப்புடன், அம்ருதா ஆடும் காட்சியை அமிதாப் தனது டிவிட்டர் கணக்கில் ஷேர் செய்துள்ளார்.

முதல் முறை

முதல்வர் மனைவி ஒருவர் இதுபோல சூட்டிங்கில் ஆடிப்பாடுவது அனேகமாக இந்தியாவில் இதுதான் முதல் முறை என்று கூறப்படுவதால் இந்த வீடியோ பெண்ணியவாதிகளிடம் பெற்ற வரவேற்பை போன்றே, அரசியல்வாதிகளிடம் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

வரவேற்பும், விமர்சனமும்

பெண்ணியவாதி எழுத்தாளர் ஷோபா டே, அம்ருதாவுக்கு சபாஷ் கூறியுள்ள நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் இதை விமர்சனம் செய்துள்ளார். ரூபாய் நோட்டுக்காக மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது, அதனால் பலன்பெற்றவர்கள் ஆடிக்கொண்டுள்ளார்கள் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியாக்களிலும், இந்த போட்டோ வரவேற்பையும், விமர்சனத்தையும் ஈட்டியுள்ளது. அம்ருதா ஆபாசமாக காட்சியளிப்பதாக சிலரும், அப்படியெல்லாம் இல்லை என சிலருமாக சோஷியல் மீடியாவில் மல்லுக்கட்டிக்கொண்டுள்ளார்கள். அம்ருதா, ஆக்சிஸ் வங்கியின் அசோசியேட் துணை தலைவர் பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Maharashtra Chief Minister Devendra Fadnavis' wife, Amruta, fast becoming the darling of the social media.
Please Wait while comments are loading...