For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொசுக்கள் வளர்த்தால் சிறை, அபராதம்... ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி!!!

கொசுக்கள் உற்பத்திக்குக் காரணமாக இருப்பவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

அமராவதி: கொசுக்கள் உற்பத்திக்குக் காரணமாக இருப்பவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதுதொடர்பான மசோதாவுக்கும் ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வருகின்றது. ஆந்திரா, தெலுங்கானா என ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

Andhra Chief minister Chandrababu naidu's new bill on mosquito

அதன் பின் ஆந்திராவுக்கு அமராவதியை அதிநவீன கட்டமைப்புடன் கூடிய தலைநகராக உருவாக்க சந்திரபாபு முயற்சித்து வருகின்றார். இந்நிலையில் நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி கொசுக்கள் உற்பத்திக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொசு உருவாகும் வகையில் சுற்றுசூழலை வைத்திருந்தால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஒரு மசோதாவுக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகமால் மக்கள் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பார்கள் என ஆந்திர அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

English summary
Andhra Chief minister Chandrababu naidu's new bill on mosquito. Andra Government announced that prison and penalty will be imposed for the persons who are keeping the environment for mosquitoes grow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X