For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறதா இந்தியா? முப்படை தளபதிகளுடன் மோடி திடீர் ஆலோசனை! #army

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முப்படை தளபதிகளும் இன்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலுள்ள, எண்- 7 லோக் கல்யாண் மார்க்கிலுள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய படைப்பிரிவுகளின் தளபதிகள் பங்கேற்றனர்.

Army, Navy and Air Force Chiefs of Staff meet PM Narendra Modi

சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். பாகிஸ்தான் மீது பதிலடி தர வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுக்க எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் முப்படை தளபதிகளுடனான, மோடியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த சந்திப்பின் போது, யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்தும் எல்லையில் தற்போது இருக்கும் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் ராணுவ தளபதிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததகாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யூரி தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டு எல்லைகளிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியா, போருக்கு தயாராகிறதா என்ற சந்தேகத்தை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.

English summary
Army, Navy and Air Force Chiefs of Staff meet PM Narendra Modi at 7 Lok Kalyan Marg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X