பாதுகாப்புத் துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றார் அருண் ஜேட்லி

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று பாதுகாப்புத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய நிதி அமைச்சரான அருண் ஜேட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை இன்று கூடுதலாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவா சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலம் இல்லாததால் சிறியக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்க வேண்டும் என்று கோவா மாநில பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Arun Jaitley has taken additional incharge as Defence Minister

அதன்படி, கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் இன்று பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக தன் வசம் இருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை பாரிக்கர் ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறையானது நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக அருண் ஜேட்லி கூடுதலாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

English summary
Arun Jaitley has taken additional charge as Defence Minister who bagged that dept Manohar Parikkar is to be a CM of Goa today.
Please Wait while comments are loading...