For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியுடன் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சந்திப்பு! ஆளுநர் குறித்து சரமாரி புகார்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த டெல்லி முதல்வர் ஆளுநர் நஜீப்ஜங் குறித்து பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபைக்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அங்கு ஆட்சி நடத்தி வருகிறது.

Arvind Kejriwal meets PM Modi, complains against L-G

நாட்டின் தலைநகரான டெல்லி, யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லி போலீஸ் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அங்கு ஆளுநருக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன.

டெல்லி ஆளுநராக உள்ள நஜீப் ஜங்கை முதல்வர் கேஜ்ரிவால் முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியாது. இதன் காரணமாக அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய கேஜ்ரிவால், டெல்லியில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் மற்றும் போலீஸுக்கு எதிராக புகார் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி அரசுடன், போலீஸ் போரில் ஈடுபட்டு உள்ளது என்று நாங்கள் உணர்கிறோம், இது நல்லது கிடையாது; எனவே இப்பிரச்சனையை கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்து உள்ளேன் என்றார்.

இதேபோன்று டெல்லி மாநில ஆளுநர் நஜீப் ஜங் எப்படி அரசு செயல்பாட்டில் குறுக்கீடு செய்கிறார் என்பது தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் விளக்கிஉள்ளேன் என்றார் கேஜ்ரிவால்.

English summary
Delhi Chief Minister Arvind Kejriwal on Tuesday took up the issue of the tussle between the Aam Aadmi Party (AAP) government and Delhi Police, seeking his intervention in the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X