For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகி விஷம்: நான் தயாரிக்கிறேன் பாருங்க சத்தான நூடுல்ஸை: இது பாபா ராம்தேவ்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: சத்தான நூடுல்ஸை தான் தயாரித்து கொடுப்பதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் மீகு வழக்கு தொடரப்பட்டது. மேகி நூடுல்ஸுக்கு பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கடைகளில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை நெஸ்லே வாபஸ் பெற்றது. ஆனால் புதுப்பொலிவுடன் திரும்பி வருவதாக அந்நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.

ராம்தேவ்

ராம்தேவ்

மேகி நூடுல்ஸ் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தனது உணவு மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான பதாஞ்சலி மூலம் சத்தான் நூடுல்ஸை தயாரித்து கொடுப்பதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

கற்றாழை நூடுல்ஸ்

கற்றாழை நூடுல்ஸ்

சத்தான வேப்பம் நூடுல்ஸ், கற்றாழை நூடுல்ஸ் என உடலுக்கு நலம் பயக்கும் வகையில் நூடுல்ஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்ய உள்ளார் ராம்தேவ்.

விரைவில்

விரைவில்

நான் தயாரிக்கும் நூடுல்ஸில் மைதாவே இருக்காது. அது மேகிக்கு மாற்றான நூடுல்ஸாக இருக்கும். உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் எதுவும் என் தயாரிப்பில் இருக்காது என்று ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

மேகி

மேகி

மேகி மன்னிப்பு கேட்க வேண்டும். அரசு அந்நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தால் அது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். விஷத்தை பரப்பும் நிறுவனம் தேவை இல்லை. மேகியில் ஈயம் உள்ளது. அதை குழந்தைகள் சாப்பிட்டால் அவர்களுக்கு இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதுடன் புற்றுநோயும் வரும் என்கிறார் ராம்தேவ்.

காம்பிளான்

காம்பிளான்

ராம்தேவ் நூடுல்ஸோடு நிற்கப் போவது இல்லை. அவர் குழந்தைகள் குடிக்கும் காம்பிளான், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்ற சத்தான பானத்தையும் அறிமுகப்படுத்த உள்ளார்.

English summary
Yoga Guru Baba Ramdev is going to introduce helathier instant noodles which will be an alternative for Maggi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X