For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பந்த் அன்றும் பசிக்கிறதா..கவலையை விடுங்க..! கோதாவில் குதித்த பெங்களூர் ஹோட்டல்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: பந்த் காரணமாக பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்த நிலையில், வீக் என்ட் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியாமல் மக்கள் தவித்தனர்.

அவர்களுக்கு உதவும் வகையிலும், தங்கள் வியாபாரத்தை பெருக்கும் வகையிலும், முக்கிய ஹோட்டல்கள் ஹோம் டெலிவரியில் குதித்தன.

Bangalore leading hotels jump in to home delivery

பந்த் காரணமாக, பெங்களூருவில் பஸ், ஆட்டோக்கள் ஓடாமல் இருந்தது. தனியார் வாகனங்களிலும் டயரில் காற்றை பிடுங்கிய சம்பவங்கள் நடந்தன. தியேட்டர்களும் குளோஸ். எனவே, வீக் என்ட்டில் வெளியே போக முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர் மக்கள்.

கடைகளும் பெரும்பாலும் மூடியிருந்ததால், இஷ்டப்பட்டதை வாங்கி சமைத்து சாப்பிடவும் முடியாத நிலை இருந்தது. மேலும், வீக் என்டில் பெரும்பாலான குடும்பங்கள் ஹோட்டல்களுக்கு சென்று பிடித்ததை சாப்பிடுவது வழக்கம். ஆனால் இன்று அதை செய்ய முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு பெங்களூருவிலுள்ள எம்பையர் உள்ளிட்ட சங்கிலி தொடர் ரெஸ்டாரண்டுகள், பெங்களூரிலுள்ள பலரின் செல்போன்களுக்கும், எஸ்எம்எஸ் மூலம், ஒரு தகவலை அனுப்பின.

அந்த தகவலில், உங்களுக்கு சாப்பாடு வேண்டுமா, நாங்கள் ஹோம் டெலிவரி செய்கிறோம் என்ற தகவல் உள்ளது. தொலைபேசியில் அழைத்தால் மட்டும் போதும் என்று அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளதுடன், தொலைபேசி எண்களும் தரப்பட்டன. இது எப்படி..

English summary
Bangalore leading hotels jump in to home delivery mode, as they close their restaurant due to bandh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X