For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்.கிற்கு ஓட்டு போடாததால் பழிவாங்குகிறதா கர்நாடக அரசு?, பெங்களூரில் இன்றுமுதல் 3 மணிநேரம் பவர்-கட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: நாட்டின் ஐடி துறை தலைநகரான பெங்களூரில் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அது 3 மணி நேரமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு காங்கிரஸ் அரசு தரும் பரிசு இந்த மின்வெட்டு என்று புலம்புகின்றனர் மக்கள்.

கர்நாடக அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால், நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பெங்களூரில் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயச்சந்திரா போனவாரம்தான் அறிவித்திருந்தார். அவர் சொல்லி வாய்மூடுவதற்குள் மின்வெட்டும் அமலுக்கு வந்தது. காலையிலும், இரவிலும் தலா 1 மணிநேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

Bangaloreans be ready for 3-hr load shedding from today

இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக, வெள்ளிக்கிழமையான இன்று முதல் பெங்களூரில் மின்வெட்டு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாக பெங்களூர் மின்சார சப்ளை நிறுவனம் (Bescom) அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள், 3 முறை தலா 1 மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்கப்போகிறதாம், பெஸ்காம்.

பிற நகரங்களில் மின்வெட்டு நேரம் 4 மணிநேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் 10 மணிநேரம் வரை கரண்ட்-கட் செய்யப்படுகிறது.

பொதுவாக எந்த ஒரு மாநில அரசும் பெங்களூரில் 2 மணி நேரத்திற்கு மேல் பவர்-கட் செய்தது கிடையாது. ஆனால், இம்முறை அது 3 மணி நேரமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவையே தேர்ந்தெடுத்தனர். இந்த கோபத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இப்படி தீர்த்துக்கொள்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

English summary
In view of the acute power shortage, Bescom on Thursday announced that there will be load shedding for three hours in the City and for four hours in other urban areas under its jurisdiction for a week with effect from Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X