For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரு: ஷாப்பிங்மாலில் செருப்பு திருடியதாக புகார்… வங்கதேச பெண்ணை தாக்கி பணம் பறிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு வணிகவளாகம் ஒன்றில் செருப்பு திருடியதாக குற்றம் சாட்டி வங்கதேச பெண்ணை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணிடம் இருந்து 65000 ரூபாயை பறித்த போலி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் ரஷிதா பேகம் (58) என்பதாகும். இவர் தனது கணவரின் சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து கடந்த வாரம் பெங்களூரு வந்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகில் உள்ள தனியார் மருத்துவமனை யில் கணவரை அனுமதித்துவிட்டு, நேற்று அருகில் உள்ள 'டி-மார்ட்' என்கிற ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளார். அங்கு உடைகள், செருப்பு, பழங்கள் வாங்கிய பிறகு பணம் செலுத்திவிட்டு, வெளியே செல்ல முயன்றுள்ளார்.

Bangladesh woman harassed in Bangalore

அப்போது பாதுகாவலர்கள் அவரைத் தடுத்து பையை சோதித்த போது, பணம் செலுத்தாத செருப்பு இருந்தது. இதையடுத்து செருப்பைத் திருடியதாகக் கூறி அவரை அழைத்துச் சென்று ஆடை களை களைந்து சோதித்துள்ள‌னர். இதற்கு ரஷிதா பேகம் ஆட்சேபம் தெரிவித்ததால், அவரை சரமாரி யாக தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 65 ஆயிரம் பணத்தையும் பறித்துக் கொண்டு வெளியே அனுப்பியுள்ளனர்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ரஷிதா பேகம் ஹெப்பகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'வங்க தேசத்தில் இருந்த வீட்டை விற்று எனது கணவரின் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு வந்தேன். ரூ. 65 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அத்தியாவசிய‌ பொருட் கள் வாங்க, டி-மார்ட் ஷாப்பிங் மாலுக்கு சென்றேன். நான் வாங்கிய பொருட்கள் அனைத்தும் கூடையில் வைத்து பில் போட கொடுத்தேன். பில் போடப்பட்ட போது தவறுதலாக நான் வாங்கிய செருப்பை சேர்க்கவில்லை.

இந்நிலையில் நான் செருப்பை திருடியதாக பாதுகாவலர்கள் எனது ஆடைகளை களைத்து அவமானப்படுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது என்னை சரமாரியாக தாக்கி பையில் இருந்த 65 ஆயிரம் பணத்தையும், எனது பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டனர்'' என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள ஹெப்பகுடி போலீஸார், ஷாப்பிங் மால் பாதுகாவலர்கள் 2 மீதும், மஞ்சுளா என்பவர் மீதும் வங்கதேச பெண்ணைத் தாக்கி, சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மஞ்சுளா என்ற பெண்மணிதான் ரஷிதா பேகத்திடம் இருந்து பணத்தை பறித்தவர் ஆவார். இவர் போலீஸ் வேடத்தில் இருந்த பெண்மணியாவார். வணிகவளாகத்தில் நடந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மஞ்சுளா வைத்திருந்த ரூ.65,000 பணத்தை சுருட்டியுள்ளார். இதனையடுத்து ரஷிதாபேகம் புகார் அளிக்கவே, மஞ்சுளாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 65,000 ரூபாயைக் கைப்பற்றினர்.

அப்போது ஷாப்பிங் மால் நிர்வாகம் தாங்கள் அந்த பெண்ணைத் தாக்க‌வில்லை. ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என்று மட்டுமே தேடினோம் என தெரிவித்துள்ளது. ஆனால் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் சோதித்துப்பார்த்த போது, வங்க தேச பெண்மணியை ஆடையைக் களைந்து, அடித்து சித்ரவதை செய்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண்ணை தாக்கிய வணிகவளாக காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
A 45-year-old woman who posed as a police inspector and extorted Rs 65,000 from a Bangladeshi woman was arrested by the Hebbagodi police in south-east Bangalore on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X