For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமீத் ஷாவை சந்தித்த பின்னரே ராகுல் காந்தி மீது ஜெயந்தி நடராஜன் புகார் மழை?

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பாஜக தலைவர் அமீத் ஷாவை ஜெயந்தி நடராஜன் ரகசியமாக சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் அவரை பாஜகவில் சேர்க்க சில முக்கியத் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று விலகியுள்ளார் ஜெயந்தி நடராஜன். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அமீத் ஷாவைச் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Before Congress Exit, Jayanthi Natarajan Met BJP Chief Amit Shah: Reports

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது அமீத் ஷா, ஜெயந்தி சந்திப்பு நடந்ததாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன. எதற்காக இந்த சந்திப்பு என்பது தெரியவில்லை. ஆனால் இந்த சந்திப்பு நடந்த நிலையில் தற்போது காங்கிரஸை விட்டு விலகியுள்ளார் ஜெயந்தி. மேலும் விலகுவதற்கு முன்பு ராகுல் காந்தியை கடுமையாக புகார் கூறி சோனியா காந்திக்கு அனுப்பிய கடிதத்தையும் கசிய விட்டுள்ளார். இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

காங்கிரஸில் உள்ள வெகு அரிதான நோ நான்சென்ஸ் தலைவர்களில் ஜெயந்தியும் ஒருவராக விளங்கியவர். மிகவும் தெளிவாகப் பேசக் கூடியவர், புத்திசாலியான ஒரு பெண் தலைவராகவும் இருந்தவர். இவரது தாயார் சரோஜினி வரதப்பன் மிகப் பிரபலமான சமூக சேவகர். தாத்தா பக்தவத்சலம், தமிழகத்தில் இருந்த கடைசி காங்கிரஸ் முதல்வர் ஆவார். இப்படிப்பட்ட குடும்பப் பின்னணி கொண்ட, ஜெயந்தி நடராஜன், பகிரங்கமாக ராகுல் காந்தியை குற்றம் சாட்டியிருக்கிறார் என்றால், ஏதோ ஒன்று இருப்பதாகவே அர்த்தம் என்றும் சொல்கிறார்கள். காரணம், தனிப்பட்ட முறையிலும் சரி, கட்சி ரீதியாகவும் சரி யாரையும் அவ்வளவு சீக்கிரம் பகிரங்கமாக குற்றம் சாட்ட மாட்டார் ஜெயந்தி.

இந்த நிலையில்தான் ஜெயந்தியின் இந்த அதிரடி குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன்பு இவர் இப்படி யாரையும் பகிரங்கமாக குற்றம் சாட்டியதாகவும் நினைவில்லை. கட்சிக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும் கூட பகிரங்கமாக அவர் யாரையும் குற்றம் சாட்டியதில்லை. முன்பு காங்கிரஸை விட்டு மூப்பனாரின் பின்னால் வந்தபோதும், மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பியபோதும் கூட அவர் யாரையும் குற்றம் சாட்டியதில்லை. உண்மையில் பார்த்தால் மிகவும் பொறுமையான, நிதானமான தலைவராக அறியப்பட்ட ஜெயந்தி பொறுமலை வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அதேபோல அவர் அமீத் ஷாவை சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவலும் கூட ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது. ஆனால் ஜெயந்தியை பாஜகவுக்குள் கொண்டு வர சில முக்கியத் தலைவர்கள் விருப்பம் காட்டாமல் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. காரணம், அவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட சில முடிவுகள் சர்ச்சைக்குரியதாக உள்ளதால் அவை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்பதால் ஜெயந்தியை சேர்ப்பதில் பாஜக அவசரம் காட்டாது என்றே தோன்றுகிறது.

ஆனால் தனது முடிவுகளில் ராகுல் காந்தியின் தலையீடு இருந்ததாக ஜெயந்தி வெட்ட வெளிச்சமாக கூறியிருப்பதால் ஜெயந்தியின் நோக்கம் என்ன என்பதும் கேள்விக்குறியதாகியுள்ளது.

English summary
Jayanthi Natarajan, the former Union minister who quit the Congress today, reportedly met with BJP president Amit Shah recently during the Winter Session of Parliament, according to sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X