For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள மருத்துவர்கள் நினைத்திருந்தால் தமிழர் உயிரை காப்பாற்றியிருக்கலாம்... ஆம்புலன்ஸ் டிரைவர் ஆதங்கம்

விபத்தில் சிக்கிய முருகனுக்கு கேரள மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்திருந்தால் அவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என ஆதங்கத்தைக் கொட்டுகிறார் ஆம்புலன்ஸ் டிரைவர்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மருத்துவர்கள் நினைத்திருந்தால் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழர் முருகனின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று அவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் இப்போதும் ஆதங்கப்படுகிறார்.

இந்தச் சம்பவம் கேரளத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படும் நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி, தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கொல்லத்தில் பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6ம் தேதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் தனியார் ஆம்புலன்சில் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 6 மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Behind the Truth of Tamil residence at Kerala

உயிருக்கு போராடி..

அனைத்து இடங்களிலும் வெண்டிலேட்டர் இல்லை, டாக்டர் இல்லை என்று கூறி அலைக்கழித்துள்ளனர். 7 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்சில் அலைய வைக்கப்பட்ட முருகன், உயிருக்குப் போராடி அதிலேயே இறந்தார்.

திடுக்கிடும் தகவல்கள்

இது குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முருகனை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் கூறியதாவது, " முருகனை மெடிட்ரினா மருத்துவமனையில் அனுமதிக்க டாக்டர்கள் மறுத்தனர். ஒரு டாக்டர் முருகனை பரிசோதிக்க ஆம்புலன்சுக்கு வந்தார்.

அனுமதி இல்லை

நோயாளி யார் என்று கேட்டார். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருடன் யாரும் வரவில்லை என்றும் தெரிவித்தேன். இதனால் அவர் வெண்டிலேட்டர் காலியில்லை என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், உதவிக்கு ஆள் இல்லை என்பதாலும் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

முயன்றிருந்தால்..

அந்த மருத்துவமனையில் போர்ட்டப்பிள் வெண்டிலேட்டர் வசதி உள்ளது. அங்குத் தலைமை டாக்டர் காலையில் பணிக்கு வருவார். அதுவரை போர்ட்டபிள் வெண்டிலேட்டர் மூலம் அவசர சிகிச்சை அளித்திருக்க முடியும்" என்று டிரைவர் கூறினார். போலீசார் நடத்திய விசாரணையில் மெடிட்ரினா மருத்துவமனையில் 7 வெண்டிலேட்டர் இருப்பது தெரிய வந்தது.

தமிழர்கள் புறக்கணிப்பு

இதில் 3 நோயாளிகள் பயன்பாட்டிலும், 3 பழுதாகியும், ஒன்று காலியாகவும் இருந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் டாக்டர்கள் முருகனுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Behind the Truth of Tamil residence at Kerala. Many sensation news spreading in media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X