For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2016ல் கூகுள் ப்ளேவின் சிறந்த கேம் ஆப்ஸ் ஆக செலக்ட் ஆன போக்கிமான் கோ

கோ... கோ...என்று எல்லோரையும் ஓட வைத்த போக்கிமான் கோ கேம்ஸ்தான் 2016ம் ஆண்டின் மிகச்சிறந்த ஆப்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சட்டப்பூர்வமாக வெளியாகாவிட்டாலும், போக்கிமான் கோ செயலி இந்த ஆண்டில் முதலிடம் பிடித்திருப்பதாக கூகுள் பிளே அறிவித்துள்ளது. கூகுள் பிளே சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த செயலி மற்றும் விளையாட்டுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டின் சிறந்த செயலிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பயனப்டுத்தப்பட்டு நல்ல விமர்சனங்களை குவித்த ஆப்ஸ் மற்றும் கேம்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த செயலிகள், கேம்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கூகுள் பிளே அறிவித்து வருகிறது.

2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த செயலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் அறிவித்திருக்கும் பட்டியலில் சர்வேதச அளவில் துவங்கி, ஒவ்வொரு நாடு வரையிலாக என தனித்தனியே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

Best Android games and apps 2016: Pokémon Go

சிறந்த ஆப்ஸ்

கூகுள் இணையப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் சிறந்த ஆப்ஸ்களை பயனர்கள் பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது நாட்டின் சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்களை இங்கு தெரிந்து கொள்ள முடியும். அதன்படி பேஸ் சேஞ்சர் 2, லுமியர் செல்ஃபி போட்டோ எடிட்டர், காஸ்ட் பாக்ஸ் போட்காஸ்ட் ரேடியோ மியூசிக், எமோஜி கி போர்டு பிளேயர், டிரெண்டிங் ஆப்ஸ் ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

போக்கிமான் கோ

கூகுள் பிளே இந்தியாவை பொருத்த வரை இந்தியாவில் வெளியாகாத போக்கிமான் கோ முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த கேமாக கிளாஷ் ராயல் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. டிராபிக் ரைடர், ஸ்லைடர் ஐ ஓ, டிரீம் லீக் சோசர் ஆகியவை டாப் 5 டிரெண்டில் இடம் பிடித்துள்ளது.

பிரிஸ்மா

பிரிஸ்மா இந்த ஆண்டின் சிறந்த செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்ஸ் மற்றும் கேம்களுக்கென வெவ்வேறு தலைப்புகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செயலிகளை பொருத்த வரை மிகவும் வித்தியாசமான செயலி, அதிகம் பகிர்ந்து கொள்ளப்பட்ட செயலி, அழகிய செயலி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி, டாப் டிரென்டிங், அதிக பொழுதுபோக்கான செயலி உள்ளிட்டவைகளோடு கேமிங் பிரிவுகளிலும் பல்வேறு தலைப்புகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

English summary
Google awarded Pokémon GO the title of Best Game 2016.The fiendishly addictive augmented reality game that lets you catch Pokémon characters in the real world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X