For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறந்தும் இறவா புகழ் பெற்ற பாரத ரத்னா ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

By Jaya
Google Oneindia Tamil News

டெல்லி: ராமேஸ்வரத்தில் பிறந்து வறுமையிலும் செம்மையாக படித்து விஞ்ஞானியாக வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த பெருமைக்குரிய டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் மரணம் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அப்துல் கலாமிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவர் மரணித்தாலும் அவரது புகழ் என்றைக்கும் மரணிப்பதில்லை.

apjkalam

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

மக்களுக்காவே இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது. உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

கனவு காணுங்கள்

எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில் என்ற அவர் "கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்" என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

பாரத ரத்னா விருது

நாட்டின் குடியரசு தலைவராவதற்கு முன்பே அப்துல் கலாமிற்கு, இந்தியாவின் மிகப்பெரிய விருதான "பாரத ரத்னா விருது" மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், "பாரத ரத்னா" விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

அப்துல் கலாம் பெற்ற விருதுகள்

1981 - பத்ம பூஷன்
1990 - பத்ம விபூஷன்
1997 - பாரத ரத்னா
1997 - தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 - வீர் சவர்கார் விருது
2000 - ராமானுஜன் விருது
2007 - அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 - கிங் சார்லஸ்-II பட்டம்
2008 - பொறியியல் டாக்டர் பட்டம்
2009 - சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 - ஹூவர் மெடல்
2010 - பொறியியல் டாக்டர் பட்டம்
2012 - சட்டங்களின் டாக்டர்
2012 - சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
தன்னுடைய வாழ்நாளில் எண்ணற்ற விருதுகளைப் பெற்றாலும் அவருக்கு வழங்கப்பட்டதனால் இந்த விருதுகள்தான் பெருமை பெருகின்றன என்பதை ஒவ்வொரு இந்தியரும் அறிவார்கள்.

English summary
Dr Abdul Kalam is famous for his simplicity and elegance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X