For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பவானிசிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக உள்ள பவானி சிங்கை நீக்கக் கோரி அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனுவை வேறு அமர்வுக்கு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில்சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில், தனி நீதிமன்றத்தில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கிவிட்டு, புதிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என, தி.மு.க.,வின் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசு வழக்கறிஞர் பவானி சிங் நடுநிலையாக செயல்படவில்லை என்பதால் அவரைநீக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதானவிசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தமனுவில் அன்பழகன் கோரியுள்ளார்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கர்நாடக உயர் நீதிமன்றத்தில்நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஏற்பு

விசாரணைக்கு ஏற்பு

தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டனர். நீதிபதிகள் யூ.யூ. லலித் மதன், பி லோகுர் ஆகியோர் பெஞ்ச் முன்பு இன்று விசாரணை நடைபெறுவதாக இருந்தது.

அன்பழகன் எதிர்ப்பு

அன்பழகன் எதிர்ப்பு

ஆனால் ஜெயலலிதா தரப்பில் ஆஜரான யு.யு.லலித் விசாரிப்பதற்கு அன்பழகன் தரப்பில் சண்முக சுந்தரம் உச்சநீதிமன்றத்தில்எதிர்ப்பு தெரிவித்தார்.

வேறு பெஞ்ச்சுக்கு மாற்றம்

வேறு பெஞ்ச்சுக்கு மாற்றம்

இதனை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள்ஏ.கே.சிக்ரி, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அன்பழகன் தரப்பு வாதத்தை ஏற்று இந்த வழக்கை நீதிபதிகள் கோயல், தாகூர் அடங்கிய வேறொரு பெஞ்ச்சுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

பவானிசிங்குக்கு லீவ்

பவானிசிங்குக்கு லீவ்

அதேநேரத்தில், வழக்கு ஆவணங்களை முழுமையாக படிக்க கால அவகாசம் தருமாறுஅரசு வழக்கறிஞர் பவானிசிங் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஜெயலலிதாவின்சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கை வரும் புதன்கிழமைக்கு கர்நாடகஉயர்நீதிமன்ற தனி பெஞ்ச் ஒத்தி வைத்துள்ளது.

English summary
The plea filed by Anbazhagan which seeks Bhavanisingh's removal from Jayalalitha asset case has been shifted to other bench of judges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X