For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடந்த 10 வருட புள்ளி விவரம்! பீகார் எம்.பி., எம்.எல்.ஏக்களில் 52% கிரிமினல் பின்புலம் உள்ளவர்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டவர்களில் 32 சதவீதம்பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என்ற தகவல் ஒரு தனியார் ஆய்வு நிறுவனம் மூலம் அம்பலமாகியுள்ளது.

பீகாரில் அடுத்த மாதம் 12ம் தேதி முதல், செப்டம்பர் 5ம் தேதிவரை ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

10 வருட தகவல்

10 வருட தகவல்

இந்நிலையில், 2004 முதல் 2014வரையில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் பீகாரில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு என்ற தனியார் அமைப்பு சேகரித்து வெளியிட்டுள்ளது.

32 சதவீத கிரிமினல்

32 சதவீத கிரிமினல்

அதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்: ஆய்வு செய்யப்பட்ட 5314 வேட்பாளர்களில், 1717 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இது மொத்த வேட்பாளர்களில் 32 சதவீதமாகும். அதில் 1041 பேர் மீது மிகமோசமான கிரிமினல் (கொலை உள்ளிட்டவை) வழக்குகள் உள்ளன. இது 20 சதவீதமாகும்.

52 சதவீத மக்கள் பிரதிநிதிகள்

52 சதவீத மக்கள் பிரதிநிதிகள்

இக்காலகட்டத்தில், இடைப்பட்ட தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 620 எம்.பிக்கள் மற்றும் எம்.எல்ஏக்களில், 321 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையிலுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது, 52 சதவீத மக்கள் பிரதிநிதிகள் கிரிமினல் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். 30 சதவீதம் பேர் சீரியஸ் கிரிமினல் குற்றங்கள் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

பாஜகவில் அதிகம்

பாஜகவில் அதிகம்

கிரிமினல் பின்னணி கொண்டவர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு கொடுத்துள்ள கட்சியாக பாஜக விளங்குகிறது. அக்கட்சியில் 54 சதவீதம் வேட்பாளர்கள் கிரிமினல் பின்புலம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். காங்கிரசை சேர்ந்த 41 சதவீத வேட்பாளர்கள் கிரிமினல் பின்புலம் கொண்டவர்கள்.

கட்சிவாரி நிலவரம்

கட்சிவாரி நிலவரம்

நிதீஷ்குமாரின் ஐக்கிய மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 46 சதவீத வேட்பார்களும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்தை சேர்ந்த 51 சதவீத வேட்பாளர்களும், லோக் ஜனசக்தியை சேர்ந்த 46 சதவீத வேட்பாளர்களும், சுயேச்சைகளில் 22 சதவீதம் வேட்பாளர்களும் கிரிமினல் பின்புலம் கொண்டவர்களாகும்.

கோடீஸ்வர வேட்பாளர்கள்

கோடீஸ்வர வேட்பாளர்கள்

சராசரியாக ஒரு வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1.13 கோடி என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது. எம்.பி அல்லது எம்.எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.46 கோடியாக உள்ளது.

English summary
Bihar is ready for polling and parties are busy finalising their list of candidates. Bihar has seen some very high voltage politics over the years and this time around too the scenario will be no different. As the parties finalise their list of candidates after all the seat sharing negotiations have ended, it would be interesting to see how Bihar has fielded candidates over the past ten years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X