For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக உட்கட்சி மோதலின் பின்னணியில் பாஜக தலைவர்கள்....சு.சுவாமி 'பொளேர்' ஒப்புதல் வாக்குமூலம்

அதிமுக உட்கட்சி மோதலின் பின்னணியில் சில பாஜக தலைவர்கள் இருப்பதாக அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிரடி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக உட்கட்சி மோதலுக்கு சில பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள்தான் காரணம் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலரான சசிகலா முதல்வர் பதவியை கபளீகரம் செய்ய இருக்கிறார். இதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கினார்.

ஓபிஎஸ் மறுப்பு

ஓபிஎஸ் மறுப்பு

இதையடுத்து திமுகவின் பின்னணியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்படுவதாக சசிகலா குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் திமுகவோ, பாஜக தமக்கு பின்னால் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

சசிக்கு சு.சுவாமி ஆதரவு

சசிக்கு சு.சுவாமி ஆதரவு

அதேநேரத்தில் சசிகலாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்து வருகிறார். இதே சுப்பிரமணியன் சுவாமிதான் ஜெயலலிதா, சசிகலா சிறைக்கு செல்ல காரணமான சொத்துகுவிப்பு வழக்கையும் தொடர்ந்தவர்.

பின்னணியில் பாஜக தலைவர்கள்

பின்னணியில் பாஜக தலைவர்கள்

தற்போது, தமிழக அரசியல் குழப்பங்களின் பின்னணியில் பாஜக தலைவர்கள் சிலர் இரு அணிகளின் பின்னணியிலும் இருக்கிறார்கள் என புது அணுகுண்டை வீசியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. அதே நேரத்தில் பாஜக தலைமையோ மத்திய அரசோ இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. பாஜக தலைவர்கள் சொந்த ஆதாயங்களுக்காக தலையிடுகிறார்கள் என கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

ஆளுநரை நீக்க வேண்டும்

அத்துடன் தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடனே நீக்க வேண்டும்; இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன் எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

English summary
BJP leader Subramanian Swamy said that some BJP leaders might be involved in pulling strings in the current political crisis in ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X