For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகார் சட்டமன்றத் தேர்தல்.. முதற்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு

Google Oneindia Tamil News

பாட்னா : பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக 43 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இளைஞர்கள், பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

amid shah

இந்த தேர்தலில் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி, ஜித்தன் ராம் மஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, உபேந்திரா குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சமதா ஆகிய கட்சிகள் பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை டெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, பீகார் சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் போட்டியிடும். அதன்படி, பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களிலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி 40 இடங்களிலும் போட்டியிடும்.

ஜித்தன் மஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 20 இடங்களிலும், உபேந்திரா குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 23 இடங்களிலும் போட்டியிடும் என அறிவித்தார்

இதையடுத்து, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 43 பேர் கொண்ட அந்த பட்டியலில் இளைஞர்களுக்கும், பெண்களும் சுமார் 50 சதவீத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

English summary
BJP on Tuesday announced the names of 43 candidates for the Bihar Assembly elections, becoming the first major party to come out with its nominees for the high-stakes polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X