For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தான் கறுப்புப்பணமும் ஊழலும் அதிகமாம்... சொல்வது பாஜக முரளிதர ராவ்

தமிழகத்தில் தான் கறுப்புப்பணமும் ஊழலும் அதிகம் உள்ளதாக பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். டிசம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு தமிழகம் ஊழலற்ற மாநிலமாக மாறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி : தமிழகத்தில்தான் கறுப்புப்பணமும் ஊழலும் அதிகம் உள்ளதாக தமிழகத்துக்கான பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் வரும் டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் ஊழலற்ற மாநிலமாக மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க தேசிய செயலாளரும், தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முரளிதர ராவ் பல்வே மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றார்.

Black money and corruptions are more in Tamilnadu: BJP accuses!

ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் தான் ஊழலும் கறுப்புப்பணமும் அதிகமாக உள்ளதாகயும் முரளிதர ராவ் குற்றம்சாட்டினார். டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் ஊழலற்ற மாநிலமாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

English summary
The BJP National general secretary muralidha rao accuses that in Tamilnadu There is too much of corruptions and black money in the state. After 30th of December the sate will be corruption free state Muralidhar rao says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X