For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிந்துவுக்கு பி.எம்.டபுள்.யூ. சரி, பெட்ரோல் யார் ஊத்துவா?: மீண்டும் சீண்டும் ஷோபா டே

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 4 பேருக்கு பி.எம்.டபுள்.யூ. கார்கள் அளிக்கப்பட்டது குறித்து பிரபல கட்டுரையாளர் ஷோபா டே ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்றது பண விரயம் என்று பிரபல கட்டுரையாளரும், நாவல் ஆசிரியருமான ஷோபா டே ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். இதை பார்த்த பலரும் ஷோபாவை கடுமையாக விமர்சித்தனர்.

BMWs for Rio Champions: Shobhaa De launches SCATHING attack

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பி.எம்.டபுள்.யூ. கார்களை வழங்கினார்.

கார்களை பணம் கொடுத்து வாங்கியவர் தொழில் அதிபர் சாமுண்டேஷ்வர்நாத். இந்நிலையில் இது குறித்து ஷோபா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பி.எம்.டபுள்.யூ.வுக்கு நல்ல விளம்பரம். இந்த விலை உயர்ந்த கார்களின் பெட்ரோல் செலவை யார் ஏற்பது? அவை சும்மா ஓரமாக நிற்காது என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடாமல், சச்சினை பற்றியும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அவரது ட்வீட்,

ரியோ வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்ட பி.எம்.டபுள்.யூ. கார்களுக்கு சச்சினா பணம் கொடுத்தார் என கேட்டுள்ளார்.

English summary
Popular columnist Shobhaa de tweeted that, 'Great ad for BMW. Who will pay for running these pricy beasts? Hoping they don't become white elephants for athletes.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X