ராம்நாத் கோவிந்த் அல்லது மீராகுமார்.. யார் வென்றாலும் மகிழ்ச்சிதான்.. மாயாவதி ஒரே நெகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நாடாளுமன்றத்தில் வாக்களித்தார். அப்போது, ராம்நாத், மீராகுமார் இருவரில் யார் வென்றாலும் மகிழ்ச்சி என்று கூறினார்.

நாட்டின் 14-ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் 4,896 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களித்து வருகின்றனர்

BSP leader Mayawathi cast vote

அதற்காக நாடாளுமன்றம் மற்றும் மாநில தலைமை செயலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பிரதமர் மோடி, பாஜக அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது வாக்கை அளிக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். பின், அவர் தனது வாக்கை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமார் இருவரில் யார் வென்றாலும் மகிழ்ச்சி என்று மாயாவதி கூறினார்.

மேலும், தாழ்த்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற எங்களது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

Mayawati slams center over intolerance, but backs GST bill

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
BSP leader Mayawathi casts her vote at the Parliament.
Please Wait while comments are loading...