For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிட்டு டோணி அணி வெற்றி, அங்கிட்டு ஆஸ்ட்ரா பரிசோதனை வெற்றி: அசத்தும் இந்தியா

By Siva
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையான ஆஸ்ட்ரா வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சி மையம் வடிவமைத்து உருவாக்கியது தான் அதிநவீன ஏவுகணையான ஆஸ்ட்ரா. வெறுங்கண்ணால் பார்க்க முடியாத இலக்குகளை கச்சிதமாக தாக்கும் திறண் கொண்டது ஆஸ்ட்ரா.

BVR missile Astra test-fired successfully again

இந்நிலையில் ஆஸ்ட்ரா ஏவுகணை சோதனை புதன் மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள பலசூரில் இருந்து இந்த ஏவுகணையை இந்திய விமானப் படை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

BVR missile Astra test-fired successfully again

வியாழக்கிழமை நடந்த சோதனையின்போது ஏவுகணை சுகோய்-30 எம்கேஐ விமானத்தில் இருந்து ஆளில்லா விமானத்தை நோக்கி ஏவப்பட்டது. ஏவுகணை தனது இலக்கைதுள்ளியமாக தாக்கியது.

முன்னதாக புதன்கிழமை நடந்த சோதனையின்போதும் ஆஸ்ட்ரா ஏவுகணை சுகோய் 30 விமானத்தில் இருந்து தான் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள தேஜாஸ் இலகு ரக விமானத்தில் பயன்படுத்தப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

English summary
Missile scientists probably decided to ‘celebrate' India's stupendous win over Bangaldesh in ICC Cricket World Cup by test-firing Astra missile again on Thursday. Ministry of Defence officially confirmed that Astra, a Beyond Visual Range (BVR) air-to-air missile, was test-fired by the Indian Air Force (IAF) off the coast of Odisha, near the Integrated Test Range, Balasore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X