For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3ஜி ஏலம்... ஒரு மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் விலை ரூ.3,705 கோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: 3ஜி ஏலத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதன் ஆரம்ப பட்ச விலை ரூ.3,705 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

Cabinet approves Rs 3,705 crore per MHZ as base price for 3G spectrum auction: Ravi Shankar Prasad

அப்போது அவர் கூறியதாவது :-

3ஜி ஏலத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் ஆரம்ப பட்ச விலை ரூ.3,705 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளின் ஆதார விலைக்கு ஏற்கெனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது' என்றார்.

இவை வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன. இவற்றின் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2,100 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் ஆதார விலையான ரூ.3,705 கோடி என்பது, 2010ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலையை விட அதிகமாகும். மேலும், இது, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரை செய்த ரூ.2,720 கோடியில் இருந்து 36 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Cabinet approved a base price of Rs 3,705 crore per megahertz (MHz) for 3G spectrum auction, a move which would help the government garner over Rs 1 lakh crore along with sale of other mobile frequencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X