For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரூ.11.43 கோடி பறிமுதல்: ஐடி துறை

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளில் மொத்தம் 11.43 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி வீட்டில் ரூ.8.33 கோடி, பெங்களூர் வீட்டில் ரூ.2.5 கோடி, மைசூரிலுள்ள வீட்டில் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது இதில் அடங்கும். இதுதவிர ரெய்டு நடைபெற்ற சிவகுமாருக்கு சொந்தமான பல இடங்களில் இருந்து, பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Shivakumar

இந்த பணம் கணக்கில் வராதது என சிவகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை, பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் மோசடியாக மாற்றிய பணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

சிவகுமாரிடமிருந்து ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்ட தகவல் நேற்றே 'ஒன்இந்தியா' உள்ளிட்ட சில ஊடகங்களில் வெளியானது. ஆனால் வருமான வரித்துறை முதலில் மறுத்த நிலையில் தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளது.

English summary
Cash totalling Rs 11.43 crore seized by IncomeTax Dept during searches on Karnataka Energy minister DKShivakumar, associates. While at Delhi, the IT department seized Rs 8.33 crore at Bengaluru and Mysuru, the amount seized was Rsw 2.5 crore and 60 lakh respectively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X