For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனித கல்லீரலை ரூ.5,100க்கு விற்பனை செய்த மருத்துவமனை ஊழியர்: பரபரப்பு வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

மீரட்: உத்தர பிரதேசத்தில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மனித கல்லீரலை விற்பனை செய்தது கேமராவில் பதிவாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக் கல்லூரி பிரேதச பரிசோதனை அறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மனித உடல் உறுப்புகளை விற்பனை செய்வதாக உள்ளூர் செய்தித்தாளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த செய்தித்தாளைச் சேர்ந்தவர்கள் அந்த ஊழியரை அணுகி மனித கல்லீரல் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

Caught on camera: Meerut hospital staff sells human liver

அவரும் பிரேத பரிசோதனைக்கு வந்த உடலில் இருந்து கல்லீரலை எடுத்து வந்து அவர்களிடம் அளித்துள்ளார். இது வீடியோவில் பதிவானது. இதையடுத்து அந்த வீடியோ காட்சி நேற்று உள்ளூர் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அவர் கல்லீரலை ரூ. 5 ஆயிரத்து 100க்கு விற்பனை செய்ததுடன் வேறு ஏதாவது பாகங்கள் வேண்டுமானாலும் தன்னிடம் கூறுமாறு தெரிவித்துள்ளார். இதற்கிடையே கல்லீரலை விற்பனை செய்தவர் தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து மீரட் மாவட்ட நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மீரட் பகுதியில் மாய, மந்திரம் செய்பவர்கள் மனித உடல் உறுப்புகளை வாங்கி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் பங்கஞ் யாதவ் கூறுகையில்,

இது மிகக் கொடிய குற்றம். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சதார் பகுதி சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டிடம் கேட்டுள்ளனேன். சம்பவம் குறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

English summary
A staff of post mortem room of Lala Lajpat Rai memorial medical college was caught on camera while he was selling human liver for Rs. 5,100 in Meerut.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X