காவிரி.. தமிழக அரசு, ஜெயலலிதாவுக்கு எதிராக சாம்ராஜ்நகரில் தமிழ் அமைப்பினர் போராட்டம்

சாம்ராஜ்நகர்: காவிரியில் தண்ணீர் கேட்கும் தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், கர்நாடக மாநிலம் 'சாம்ராஜ்நகர் தாலுகா தமிழ் சங்கம்' சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த சங்கத்தின் சார்பாக, நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று, சாம்ராஜ்நகரில் பேரணி நடத்தி நடு ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழக அரசு ஒழிக, ஜெயலலிதா ஒழிக.. என அவர்கள் கோஷமிட்டனர்.

Cauvery issue: Chamrajnagar Tamil organization members staged protests

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ் அமைப்பினர் கூறுகையில், கர்நாடகாவுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலை. தமிழகத்தில் சம்பா பயிருக்கு தண்ணீர் கேட்கிறார்கள். ஜெயலலிதா, அனைத்து விஷயத்தையும் ஆலோசித்து தண்ணீர் கேட்க வேண்டும். கர்நாடகாவில் இப்போதே குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. வரும் மாதங்களில் பெரிய கஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காவிரி விஷயத்தில் கர்நாடகாவின் பக்கம் நிற்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

தமிழக எல்லையிலுள்ள கர்நாடகாவின், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தமிழர்கள் கணிசமாக வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chamrajnagar Tamil organization members staged protests in the Chamrajnagar city over Cauvery issue.
Please Wait while comments are loading...

Videos