For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சைபர் குற்றவாளிகளுக்கு செக்...ஐபோனை உளவு பார்க்க ஆய்வு கூடம் அமைக்கிறது சிபிஐ!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஆப்பிள் ஐபோனை வைத்து செய்யப்படும் குற்றச்செயல்களை கண்டுபிடித்து தடுக்க சிபிஐ புதிய ஆய்வு கூடம் அமைக்க உள்ளது.

இந்தியாவில் ஐபோன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வவருகிறது. அதற்கேற்ப போன் மூலமான குற்றச்செயல்களும் கூடி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் போலீசார் கைது செய்த கிரிமினல்களிடமிருந்து10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதே, இதற்கு சாட்சி.

குற்றங்கள் அதிகரிப்பு

குற்றங்கள் அதிகரிப்பு

கிரிமினல்கள் கைகளிலும் ஐபோன் அசுர வேகத்தில் புழங்க ஆரம்பித்துள்ளதால், அதன்மூலம் செய்யப்படும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.

ஆப்பிள் தயாரிப்புகள்

ஆப்பிள் தயாரிப்புகள்

ஐபோன்கள் மற்றும் ஐபேட் போன்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை, கிரிமினல்களிடமிருந்து பறிமுதல் செய்ய நேரிட்டால், பிறகு அதிலுள்ள விவரங்களை எடுக்க வெளிநாடுகளுக்கு அவற்றை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய போலீசாரும், சிபிஐயும் தற்போது உள்ளது.

ஆய்வு நிலையம்

ஆய்வு நிலையம்

இதை சரி செய்ய, இந்தியாவிலேயே, ஐபோன் ஆய்வு கூடத்தை திறக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சிபிஐ அகாடமியில், நவீன தொழில்நுட்பம் மற்றும் சாப்ட்வேர் வசதிகளுடன் இந்த ஆய்வு கூடம் அமைய உள்ளது. இதன்மூலம், ஐபோனில் உள்ள விவரங்களை எளிதாக டிரேஸ் செய்யலாம்.

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள்

பொருளாதார குற்றங்கள், சைபர் குற்றங்களை கண்டறிந்து சரி செய்ய இந்த ஆய்வு கூடம் உதவும் என்று சிபிஐ வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

English summary
Planning to commit a crime using your Apple iPhone in India? You may not be able to get away as the Central Bureau of Investigation today is well equipped to crack it. The new specialized forensic lab which was opened up yesterday will now help the CBI crack and decipher data from all Apple devices including the iPad and the iPhone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X