For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு: முந்தியடித்த மாணவர்களால் கிராஷ் ஆன சிபிஎஸ்இ வெப்சைட்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. முடிவுகளை காண மாணவ, மாணவிகள் முந்தியடித்ததால் சிபிஎஸ்இ இணையதளம் கிராஷ் அதாவது செயல் இழந்தது.

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளமான cbse.nic.in-ல் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை காண மாணவ, மாணவியர் முந்தியடித்தனர். இதனால் அந்த இணையதளம் கிராஷ் ஆனது. தற்போது இணையதளம் வேலை செய்கிறது.

CBSE website crashes after students' rush

சிபிஎஸ்இ பிரிவில் டெல்லி சாகேத் பகுதியில் உள்ள நியூ கிரீன் ஃபீல்டு பள்ளி மாணவி எம். காயத்ரி 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். நொய்டாவில் உள்ள அமிட்டி சர்வதேச பள்ளி மாணவி மைதிலி மிஷ்ரா 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

வழக்கம் போன்று இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவிகளில் 87.56 சதவீதம் பேரும், மாணவர்களில் 77.77 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

English summary
The website of the Central Board of Secondary Education (CBSE) crashed under the heavy traffic about an hour after the Class 12 board results for all regions were declared on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X