For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலநடுக்கத்தால் வட மாநிலங்களில் செல்போன் சேவை பாதிப்பு

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று முற்பகலில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் செல்போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் குறித்து தகவல் அறிந்ததும், உறவினர்கள் பலரும் தொலைபேசி வாயிலாக மற்ற உறவினர்களை தொடர்பு கொள்ள முயன்றதால், பல இடங்களில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Cell Phone service affected in North India due to quake

டெல்லியில் மற்றும் வட இந்தியாவில் ஒரு சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. டெல்லியில் 45 வினாடி இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, நேபாள், ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களிலும் தமிழகத்தில் சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

டெல்லியில் நிலநடுககம் காராணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே மிகப்பெரியது என்கிறார்கள்.

English summary
Telephone and cell phone service in North India has been affected due to today's earthquake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X