For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணவீக்கம்: அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய மோடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று மாநில அரசுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இவ்விவகாரம் தொடர்பாக அத்துறையை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக 6.01 சதவீதமாக உயர்ந்தது. பருவமழை குறைவாக பெய்யும் என்ற கணிப்பாலும், ஈராக் போர் நிலவரத்தால், எண்ணெய் சந்தையில் எதிரொலிக்கும் தாக்கத்தாலும் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Centre meets to discuss inflation, asks states to crack down on hoarder

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கும் என்று அதன் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று மாநில அரசுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இவ்விவகாரம் தொடர்பாக அத்துறையை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்தில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிற அமைச்சர்கள் பங்கேற்றனர். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்

English summary
With prices of essential food items shooting up, the Centre on Tuesday unveiled measures to tame inflation by asking state governments to crack down on hoarders and delist items such as onions and potato on which a minimum export price was slapped to discourage exports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X