For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கராந்திக்கு 20 கிலோ அரிசி “ஃப்ரீ”- நாயுடு அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திராவில் மக்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் மாநில தலைநகர் மசோதா உள்பட 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியபோது,

Chandrababu Naidu's Pongal Gift to BPL Families

"ஆந்திராவில் 93 சதவீத விவசாயிகள் கடனில் மூழ்கி உள்ளனர். அவர்களை பாதுகாக்கவே விவசாய்யிகளுக்கு வங்கி கடன் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்.

ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகையை ஏழை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இதற்காக ரேஷன் கடைகள் மூலம் வெள்ளைநிற ரேஷன் கார்டுகளுக்கு தலா 20 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, அரை கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ வெல்லம், அரை லிட்டர் பாமாயில், 100 கிராம் நெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

மேலும் நகர்ப்புற பகுதியினருக்கு 4 லிட்டர் மண்எண்ணெயும், கிராமப் புற மக்களுக்கு 2 லிட்டர் மண்எண்ணெயும் மானிய விலையில் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister Chandrababu Naidu declares a gift pack consisting of essential commodities will be supplied to all Below Poverty Line (BPL) families in Andhra Pradesh as Pongal 2015 gift.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X