For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன்மோகன்சிங் மீதான நிலக்கரி ஊழல் வழக்கை முடிக்கக் கோரிய சி.பி.ஐ. அறிக்கையை நிராகரித்தது கோர்ட்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான வழக்கு உட்பட 6 வழக்குகளை முடித்து வைக்குமாறு சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு மார்ச் 10-ந் தேதி சி.பி.ஐ. முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

Coal case: Court rejects CBI closure report against Manmohan Singh

இதையடுத்து இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் தினமும் விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சிறப்பு நீதிபதி பராஷர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி விசாரணையை தொடங்கினார்.

இதில் 15 வழக்குகள் தொடர்பான புலனாய்வு அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இருப்பினும் 9 வழக்குகளில் மட்டும் அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ. 6 வழக்குகளை முடித்து வைப்பதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்திருந்தது.

வழக்குகளை முடித்து வைப்பதற்காக சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிமன்றம், மேற்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதில் ஒரு வழக்கு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஸா மாநிலத்தில் உள்ள தலபிரா 2 நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்தது தொடர்பானது ஆகும். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

English summary
A special court established last year to specifically try the cases relating to the allocation of coal blocks has rejected closure reports filed by the CBI in six of cases, including one against former Prime Minister Manmohan Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X