For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆணுறைக்கு இப்படி பற்றாக்குறையா இருக்கே: எய்ட்ஸ் பயத்தில் கர்நாடக பாலியல் தொழிலாளிகள்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் ஆணுறை பற்றாக்குறையாக உள்ளதால் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக பாலியல் தொழிலாளிகள் அஞ்சுகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரம், உடுப்பி மற்றும் ஹாஸன் ஆகிய மாவட்டங்கள் மற்றும் தொட்டபல்லபூர் தாலுகாவில் பாலியல் தொழிலாளிகள் ஆணுறை பற்றாக்குறையால் அல்லாடுகிறார்கள். இதனால் எய்ட்ஸ் நோய் பரவிவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சமூகத்தில் இருந்து போதிய ஆணுறைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆணுறைகள்

ஆணுறைகள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு மாநில அரசு மாதம்தோறும் 26 முதல் 30 லட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

டிசம்பர்

டிசம்பர்

டிசம்பர் மாதம் பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்க வெறும் 6.9 லட்சம் ஆணுறைகளே உள்ளன. இப்படி ஆணுறை பற்றாக்குறை இருப்பதால் எய்ட்ஸ் நோய் பரவும் என்ற அச்சத்தில் உள்ளனர் பாலியல் தொழிலாளிகள்.

பயம் வேண்டாம்

பயம் வேண்டாம்

பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்க விரைவில் போதிய அளவு ஆணுறைகள் வாங்கப்படும், அதனால் பயம் வேண்டாம் என்று கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சமூக திட்ட தலைவர் எஸ்.ஜி. ரவீந்திரா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா

கர்நாடகா

ஆணுறைகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பாலியல் தொழிலாளிகளுக்கு ஆணுறைகளை இலவசமாக வழங்கும் என்.ஜி.ஓ.க்கள் தெரிவித்துள்ளன. ஹெச்.ஐ.வி. வைரஸ் பாதிப்புடன் இருக்கும் நபர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தொழிலாளிகள்

பாலியல் தொழிலாளிகள்

கர்நாடகாவில் சுமார் 87 ஆயிரம் பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். இந்நிலையில் பற்றாக்குறையால் ராமநகரம், புறநகர் பெங்களூர் மற்றும் உடுப்பு மாவட்டங்களில் பாலியல் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஆணுறை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அபாயம்

அபாயம்

கடந்த 10 ஆண்டுகளாக எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த பட்ட பாடு எல்லாம் தற்போது வீணாகிவிடப் போகிறது என்று என்.ஜி.ஓ.க்கள் அஞ்சுகின்றன. ஆணுறை பற்றாக்குறையால் கர்நாடகாவில் எய்ட்ஸ் நோய் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

English summary
AIDS fear has gripped the sex workers of Karnataka due to severe scarcity of condoms in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X