ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங். எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளர் பல்வந்த்சிங் ராஜ்புத்துக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அக்கட்சி மேலிடம் சஸ்பென்ட் செய்ய உள்ளது.

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளர்களான அமித்ஷா, ஸ்மிருதி இரானி வெற்றி உறுதியானது. 51 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் கட்சியும் மூத்த தலைவர் அகமது படேலை களமிறக்கியது.

பாஜக அதிரடி

பாஜக அதிரடி

ஆனால் அகமது படேலை தோற்கடிப்பதில் பாஜக மும்முரம் காட்டியது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அடுத்தடுத்து ராஜினாமா செய்ய வைத்து வளைத்துப் போட்டது பாஜக. இதனால் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ்.

மாஜி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேட்பாளர்

மாஜி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேட்பாளர்

இதனிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்த பல்வந்த்சிங் ராஜ்புத்தையே பாஜக வேட்பாளராகவும் அறிவித்தது. இதனால் அகமது படேலுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் இன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

படேலை காலை வாரிய காங்.

படேலை காலை வாரிய காங்.

இதில் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகவே பாஜகவுக்கு வாக்களித்ததாக பேட்டியளித்தனர். காங்கிரஸ் இருந்து வெளியேறிய வகேலாவும் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக கூறினார். ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. சோட்டு வாசவா, அகமது படேலுக்கு வாக்களித்ததாக கூறியிருந்தார்.

சஸ்பென்ட் உறுதி

சஸ்பென்ட் உறுதி

இதனால் அகமது படேல் வெல்வாரா? என்ற நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் பாஜகவுக்கு வாக்களித்த வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் சஸ்பென்ட் செய்யும் என்றே தெரிகிறது.

Sasikala Pushpa | Jayalalitha | Rajya Sabha | Trichy Siva | ஜெ. என்னை அடித்தார் | சசிகலா புஷ்பா

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Congress High Command will suspend the MLAS who cross voting in Gujarat Rajya Sabha Poll.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்