ராகுலைத் தொடர்ந்து காங்கிரஸ் டிவிட்டர் கணக்கை முடக்கிய விஷமிகள்.. கண்டபடி டிவிட்.. பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த விஷமிகள் மோசமான டிவிட்டுகளை வெளியிட்டு நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தினர். எனது குடும்பம் ஊழல்வாதிகளால் சூழப்பட்டது.. என்றெல்லாம் வேறு ராகுல் காந்தி டிவிட்டர் கணக்கிலிருந்து டிவிட்டுகள் வெளியாகியிருந்தன.

பெரும் போராட்டத்திற்கு பிறகு, சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ராகுல் காந்தி டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கையும் இன்று காலை விஷமிகள் முடக்கிவிட்டனர். சுமார் 12 மோசமான டிவிட்டுகளை விஷமிகள் வெளியிட்டனர்.

Congress hacked on Twitter

அரை மணி நேரத்தில் அது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயத்தால் அப்செட் ஆகியுள்ளனர். லோக்சபாவில் காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுனகார்கே இவ்விஷயம் குறித்து விவாதிக்க வேண்டுகோள்விடுத்தார். அதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்.

Congress hacked on Twitter

காங்கிரஸ் நற்புகழை கெடுக்கவும், ராகுல் காந்தி வளச்சியை முடக்கவும் நடக்கும் அரசியல் சதி என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் டிவிட் செய்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

English summary
Hours after abusive tweets were posted on Rahul Gandhi's Twitter account, his Congress party's account was hacked.
Please Wait while comments are loading...