For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரசில் இருந்து விலகியது ஏன்? எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: தமக்குரிய மரியாதை காங்கிரசில் கிடைக்கவில்லை என்று கூறிய எஸ்.எம்.கிருஷ்ணா அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை சீரைமைக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளதாகக் கூறினார்.

கர்நாடக மாநிலம் மண்டியாவைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா (84) 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக செயல்பட்டவர். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், கர்நாடக முதல்வராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் பதவி வகித்தவர்.

Congress leadership has no seriousness: SM Krishna

இந்நிலையில் கடந்த ஜனவரி 28-ம் தேதி காங்கிரஸ் கட்சி யில் இருந்து விலகுவதாக எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார். இதையடுத்து கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோர் அவரை நேரில் சந்தித்து பாஜகவில் இணையுமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது பாஜகவில் இணைந்தால் முக்கிய பதவிகள் வழங்குவதாக அவரிடம் உறுதி அளித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று முன்தினம் பாஜகவில் முறைப்படி இணைந்தார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரசில் தாம் பதவி எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் மரியாதையை தான் எதிர்பார்த்ததாகவும் கூறினார்.

ஆனால் தமக்குரிய மரியாதை காங்கிரசில் கிடைக்கவில்லை என்று கூறிய எஸ்.எம்.கிருஷ்ணா அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை சீரைமைக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளதாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி அடிமட்டம் முதல் தலைமை வரை மறு கட்டமைப்பு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் தலைமையில் இருப்பவர்களுக்கு ஒரு தீவிரத்தன்மை இல்லை. காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கும், அனுபவம் மற்றும் சீனியாரிட்டிக்கும் தொடர்பு இல்லை.

ஊழல் மீது முழு சகிப்பு தன்மையின்மை உடன் மோடி செயல்படுகிறார். அது என்னை கவர்ந்திழுத்தது. பண மதிப்பிழக்க நடவடிக்கையையும் நான் ஆதரிக்கிறேம்" என்றார்.

English summary
A day after he joined the BJP, former external affairs minister and Congressman S M Krishna criticised his former party. Krishna, who had been a member of the Congress for more than four decades, said that the senior leadership of the Grand Old Party had no seriousness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X