For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்று இல்லாத மாற்றம்... ராகுல் காந்தியைப் பார்த்து வியக்கும் காங்கிரஸார்!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பார்த்து அக்கட்சியினர் வியந்து வருகிறார்கள்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 56 நாட்கள் விடுப்பில் வெளிநாட்டுக்கு சென்றார். ராகுல் எங்கே எங்கே என்று எதிர்கட்சியினர் கேட்டபோது எல்லாம் அவர் விரைவில் வருவார் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வந்தனர்.

விடுப்பில் இருந்து திரும்பிய பிறகு ராகுல் காந்தியிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில்

நாடாளுமன்றத்தில்

நாடாளுமன்றத்தில் அமைதி காத்து வந்த ராகுல் விடுப்பில் இருந்து நாடு திரும்பிய பிறகு 5 முறை அம்சமாக பேசினார். ராகுலின் பேச்சை கேட்டு காங்கிரஸார் வியந்தனர். அந்த அளவுக்கு மத்திய அரசை விளாசினார்.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

ராகுல் வறுமையில் வாடும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசி வருகிறார். மேலும் 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இது தவிர உத்தரகண்ட் மலையில் உள்ள கேதர்நாத்துக்கு புனித யாத்திரை சென்றார். தனது தொகுதியான அமேதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

கேரளா

கேரளா

ராகுல் ஜூன் மாதத்தில் கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் 2 பேரணிகளில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

காங்கிரஸார்

காங்கிரஸார்

விடுப்புக்கு முன்பு இருந்த ராகுலுக்கும் தற்போதுள்ள ராகுலுக்கும் வித்தியாசம் உள்ளது. 56 நாட்கள் விடுப்பில் இத்தனை மாற்றமா என்று காங்கிரஸ் கட்சியினர் வியக்கிறார்கள். அதே சமயம் அவர் தொடர்ந்து இவ்வாறு செயல்பட வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள்.

English summary
Congressmen are wondering at the changes in their party vice president Rahul Gandhi after his 56 days sabbotical.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X