For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாரதா நிதி நிறுவன மோசடி: மம்தா பானர்ஜியை விசாரிக்க வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

Mamata Banerjee
கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சூரிய காந்த் மிஸ்ரா வலியுறுத்தினார்.

மேற்கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. குணால் கோஷ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட விடியோ சி.டி. வெளியாகியுள்ளது. அதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது கட்சியின் பொதுச் செயலர் முகுல் ராய் உள்பட மூத்த தலைவர்களின் பெயர்களை குணால் கோஷ் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மிஸ்ரா செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக மம்தா பானர்ஜி உள்பட குணால் கோஷ் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைது செய்யலாம்.

இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தவில்லை. அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வலியுறுத்துகிறோம். பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ள இந்த வழக்கை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

English summary
Leader of Opposition in West Bengal Assembly Surjya Kanta Mishra today demanded that all those named by arrested Trinamool Congress Rajya Sabha MP Kunal Ghosh, including Chief Minister Mamata Banerjee, be interrogated in connection with Saradha Group ponzi scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X