For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பார் ஊழல் வழக்கு: கேரள முன்னாள் நிதி அமைச்சர் கிலி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் பார் ஊழல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளதால் முன்னாள் நிதி அமைச்சர் கலக்கத்தில் உள்ளார்.

கேரளாவில் கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் நிதி அமைச்சராக இருந்தவர் கே. எம். மணி. இவருக்கு மூடப்பட்ட மது பார்களை திறப்பதற்காக ரூ.1 கோடி லஞ்சம் கொடுத்தாக கேரள மது பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிஜி ரமேஷ் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து கே.எம். மணி
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Court orders further probe against K M Mani in bar scam

இந்த வழக்கை விசாரித்த விஜிலென்ஸ் ஏடிஜிபி சங்கர் ரெட்டி, கே.எம். மணி பணம் வாங்கியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் கடந்த வருடம் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில் மது பார் ஊழல் வழக்கில் முன்னாள் ஏடிஜிபி சங்கர்ரெட்டி குளறுபடி
செய்துள்ளார். எனவே இது தொடர்பாக மறு விசாரணை நடத்த வேண்டும் என விஜிலென்ஸ் எஸ்பி சுதேசன் திருவனந்தபுரம் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதை பரீசிலனை செய்த விஜிலென்ஸ் நீதிமன்றம் கே.எம். மணி மீதான மது பார் ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு இழுத்தடிப்பால் ரிலாக்சாக இருந்த முன்னாள நிதி அமைச்சர் மணி
நீதிமன்ற மறு விசாரணை உத்தரவால் கிலியில் உறைந்து போய் காணப்படுகிறார்.

English summary
In fresh trouble for Kerala Congress (M) (KC-M) supremo K M Mani, a vigilance court on Saturday ordered further probe against him in the bar bribery scam but the former finance minister said he would face it courageously.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X