For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் வெள்ள பாதிப்பு – பாதிக்கப்பட்டவர்களைத் தேட கூகுளின் “பெர்சன் ஃபைண்டர்”!

Google Oneindia Tamil News

டேராடூன்: ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூகுள் சார்பில் ஒரு தேடுதல் பொறி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையாகக் கொட்டித் தீர்த்த மழையால் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

60 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த பாதிப்பு நிலவி வருகின்றது.

Crisis tools launched for the Jammu and Kashmir flood

தொடர்புகள் துண்டிப்பு:

இந்த வெள்ளத்தால், தொலைத்தொடர்புகள் கூட துண்டிக்கப்பட்டு விட்டன.

கூகுள் தேடு பொறி:

இந்நிலையில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் "கூகுள் பெர்சன் பைண்டர்" என்ற சிறப்பு தேடு பொறி உருவாக்கப்பட்டுள்ளது.

விவரங்கள் அறியலாம்:

இதன்மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

தகவல் பகிர்வு:

இந்த இணைய பொறியின் மூலமாக தனியொருவர் தங்களைப் பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். மேலும், தங்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு என்ன நிலைமையில் இருக்கின்றார்கள் என்றும் அறிய முடியும்.

தேடும் பெயர் பதிவு:

ஒருவேளை பாதிக்கப்பட்ட பகுதியில் உங்கள் உறவினர் இருந்தால், "நான் ஒருவரைத் தேடுகின்றேன்" என்ற லிங்கை அழுத்தி, அவர்களுடைய பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

பாதுகாப்பு பற்றிய தகவல்கள்:

மற்றவர்கள் நீங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும் என்றால், அல்லது யாரைப் பற்றியேனும் தெரிவிக்க வேண்டும் என்றால், "என்னிடம் சில தகவல்கள் உள்ளன" என்ற லிங்கை அழுத்தி பெயர், விவரங்களைத் தெரிவிக்கலாம்.

ஒன்றிணைந்த தகவல்கள்:

பெயர் குழப்பங்கள் வராத வகையில் தேடுபவர்களை ஒன்றிணைத்து கூகுள் தகவல்களை தெரிவிக்கும். இந்த பொறியானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

English summary
The state of Jammu and Kashmir is facing its worst floods in 60 years. Given that the flood has uprooted communication modes making the area almost inaccessible, we have launched several tools, to help gather and relay information about people affected by the devastation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X