For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 மாதங்களாக சி.ஆர்.பி.எப் படைக்கு தலைவரே இல்லை.. மத்திய அரசின் அலட்சியத்தால் பலியான 26 வீரர்கள்

மத்தியில் புதிய அரசு பதவியேற்றதும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்ட அறிவிப்பில் இந்த படைப்பிரிவு முன்னேற்றத்திற்காக கொள்கை உருவாக்கப்படும் என்றார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மதியம், சுக்மாவில் 150 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மாவோயிஸ்ட்கள் கடும் தாக்குதல் நடத்தினர். மேலும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் முகாமில் இருந்த துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை மாவோயிஸ்ட்கள் எடுத்து சென்றுள்ளனர்.

கிராம மக்கள் மூலமாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு இந்த தாக்குதலை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

சாப்பிட உட்கார்ந்திருந்தனர்

சாப்பிட உட்கார்ந்திருந்தனர்

சுமார் 300 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுற்றி நின்று சாப்பாட்டிற்காக அமர்ந்திருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களில் ஒரு பிரிவு சாப்பிட உட்கார்ந்தபோது மமற்றொரு பிரிவு சுற்றி நின்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டபடி இருந்தது. ஆனால் அப்போது திடீரென கால் நடைகளுடன் கிராம மக்கள் சிலர் திரளாக அங்கு வந்துள்ளனர்.

கிராம மக்கள் கேடயம்

கிராம மக்கள் கேடயம்

கிராம மக்கள் சி.ஆர்.பி.எப் வீரர்களிடம் ஏதோ பேச்சுகொடுத்துள்ளனர். அப்போது மாவோயிஸ்டுகள் ஒருபுறமிருந்து துப்பாக்கி சூடும், வெடிகுண்டு தாக்குதலும் நடத்தியுள்ளனர். வீரர்கள் பதிலடி தர தயாரானபோது, கிராம மக்களை கேடயமாக மாவோயிஸ்டுகள் பயன்படுத்தியதால் வீரர்கள் பதிலடி தாக்குதலை நடத்த முடியவில்லை.

அதிர்ச்சி தகவல்கள்

அதிர்ச்சி தகவல்கள்

இந்த தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களில் நால்வர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு அதிர்ச்சி தவலும் இதில் கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

இரு மாதங்களாக தலைமை இல்லை

இரு மாதங்களாக தலைமை இல்லை

3 லட்சம் வீரர்களை கொண்ட சி.ஆர்.பி.எப் படைப்பிரிவுக்கு கடந்த இரு மாதங்களாக தலைவரே நியமிக்கப்படவில்லை. தலைவரே இல்லாமல்தான் இயங்கிக் கொண்டுள்ளது அந்த பாதுகாப்பு படை.

அறிவிப்பு ஜோர்

அறிவிப்பு ஜோர்

சி.ஆர்.பி.எப் படையின் முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங் கூறுகையில், மத்தியில் புதிய அரசு பதவியேற்றதும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்ட அறிவிப்பில் இந்த படைப்பிரிவு முன்னேற்றத்திற்காக கொள்கை உருவாக்கப்படும் என்றார். மூன்று வருடங்கள் ஆன பிறகும் அந்த கொள்கை எங்கே என கேள்வி எழுப்பினார்.

உளவுத்துறை என்ன செய்தது?

உளவுத்துறை என்ன செய்தது?

300 மாவோயிஸ்டுகள் துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரை தாக்க செல்வது என்பது பல கிராமங்களுக்கும் கண்டிப்பாக முன்கூட்டியே தெரிந்திருக்கும். ஆனால் மாநில உளவுத்துறை இதை ஏன் கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

English summary
CRPF known as paramilitary force has been without a full-time boss for almost two months now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X