For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி அருகே பிடிபட்டவர்கள்.. பிரிட்டீஷ் மாலுமிகளை விடுதலை செய்ய மோடிக்கு, கேமரூன் கடிதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் வந்த கப்பலில் இருந்து பிடிபட்ட பிரிட்டீஷ் மாலுமிகளையும், கப்பல் ஊழியர்களையும் விடுதலை செய்யுமாறு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2013ம் ஆண்டு தூத்துக்குடியில் இருந்து 10.8 நாட்டிகல் மைல் தொலைவில் பிரிட்டீஷ் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளதை பார்த்த இந்திய கடற்படை அந்த கப்பலை மடக்கியது. கப்பலில் இருந்த, 6 மாலுமிகள் மற்றும் 29 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். கப்பலுக்குள் பல்வேறு ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்புக்குள்ளானது.

David Cameron asks Modi to free Britons held in Tuticorin

இந்த வழக்கை தமிழ்நாடு சிஐடி போலீசின், கியூ பிரிவு விசாரித்து வருகிறது. ஆயுத சட்டத்தின்கீழ் போடப்பட்ட வழக்கை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன், மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கப்பல் ஊழியர்களின் குடும்பம், நிதி பிரச்சினையில் சிக்கியுள்ளதோடு, கடுமையான மன உளைச்சலிலும் உள்ளது. எனவே பிடிபட்டவர்களை விடுதலை செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துமீறி நுழைந்த குற்றம் குறித்து ஆய்வு செய்து பிரிட்டீஷ் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
British Prime Minister David Cameron has written a letter to Prime Minister Narendra Modi for the immediate release of six British sailors who were arrested in 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X