For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கு: தயாநிதி மாறனிடம் 6 மணிநேரம் சி.பி.ஐ. கிடுக்குப்பிடி விசாரணை!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 6 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

2004- 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது 700-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி. ஒளிபரப்புக்குப் பயன்படுத்தினார் என்பது வழக்கு. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது.

Dayanidhi Maran to appear for CBI questioning

இவ்வழக்கில் தயாநிதி மாறனை கைது செய்யவும் காவலில் வைத்து விசாரிக்கவும் சி.பி.ஐ. அனுமதி கோரியிருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தயாநிதிமாறன் தப்பினார். மேலும் சி.பி.ஐ. முன்பாக இன்று (நவம்பர் 30) முதல் ஒரு வார காலத்துக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் முன் தயாநிதி மாறன் ஆஜரானார். அவரிடம் மாலை வரை சுமார் 6 மணிநேரம் தொடர்ச்சியாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

சட்டவிரோத டெலிபோன் இணைப்புகள் மற்றும் சன். டிவி. ஆதாயமடைந்தது எப்படி என்பது பற்றியும் சி.பி.ஐ. அதிகாரிகள் தயாநிதி மாறனிடம் மீண்டும் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

English summary
Former Union Minister Dayanidhi Maran will appear before CBI for Illegal Telephone Exchange case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X