For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரியாக பதில் அளிக்கவில்லை: தயாநிதி மாறனை மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறது சிபிஐ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 770 உயர் ரக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அதன் மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தயாநிதி மாறனிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த 1ம் தேதி முதல் 3 தினங்கள் டெல்லியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு தயாநிதி மாறன் பதில் அளிக்கவில்லை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். 2007ல் அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியதும், திமுக மக்களவை உறுப்பினராக நீடித்தார். அப்போது அமைச்சர் என்ற முறையில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண் "24371515' சேவையை "எம்.பி. ஒதுக்கீட்டுக்கானதாக மாற்றித் தரும்படி பிஎஸ்என்எல் தலைமை அதிகாரிக்கு அவர் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, "தயாநிதி மாறன் குறிப்பிட்ட "2437' எனத் தொடங்கும் தொலைபேசி எண்ணுக்குரிய சேவை, சாதாரண பயன்பாட்டுக்கானதல்ல. அதனுடன் நூற்றுக்கணக்கான தொலைபேசி சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன' என்பது கண்டறியப்பட்டு, மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

 சிபிஐ அதிகாரிகள் சோதனை

சிபிஐ அதிகாரிகள் சோதனை

இது குறித்து சிபிஐக்கு வந்த புகார்களின் அடிப்படையில், தயாநிதி மாறனின் சென்னை போட் கிளப் வீட்டிலும், சன் டிவி அலுவலகத்திலும் 2007, செப்டம்பரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, "24371500' என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறன் பெயரில் அல்லாமல் "பிஎஸ்என்எல் பொது மேலாளர்-சென்னை தொலைபேசி இணைப்பகம்' என்ற பெயரில் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம், தயாநிதி மாறனின் வீட்டில் அப்போது தொலைபேசி எண் "24371515' பயன்பாட்டில் இருந்தது.

 சன் டிவி நிறுவனத்திற்காக

சன் டிவி நிறுவனத்திற்காக

"24371515' என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் பற்றி சிபிஐ நடத்திய விசாரணையில், 2007, மார்ச் மாதத்தில் மட்டும் 48,72,027 அலகு (யூனிட்) தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணுக்குரிய இணைய வசதியைப் பயன்படுத்தி விடியோக்களை உலகின் எந்தப் பகுதிக்கும் நேரலை ஒளிபரப்புக்கு இணையான வேகத்தில் அனுப்ப முடியும். தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்துக்காக மேற்கண்ட தொலைபேசி சேவை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது.

 நூற்றுக்கணக்கான இணைப்புகள்

நூற்றுக்கணக்கான இணைப்புகள்

மேலும், நூற்றுக்கணக்கான இணைப்புகளைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகம் போன்ற வசதி, தயாநிதி மாறனின் போட் கிளப் இல்லத்தில் இருந்து தேனாம்பேட்டையில் இயங்கிய அவரது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி அலுவலகம் வரை பூமிக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் மூலம் இணைக்கப்பட்டது சிபிஐயின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இது குறித்து அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலருக்கு சிபிஐ அனுப்பிய கடிதம் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தப் பின்னணிதான் பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர முக்கிய காரணம்

 தயாநிதிக்கு முன்ஜாமீன்

தயாநிதிக்கு முன்ஜாமீன்

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி கடந்த 29ம் தேதி, தயாநிதிமாறனுக்கு ஃபேக்ஸ் மூலமும் தொலைபேசி மூலமும் தகவல் அனுப்பியது சி.பி.ஐ. ஏற்கெனவே, இந்த வழக்கில் கண்ணன், ரவி, கௌதமன் என சன் டி.வி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் தானும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய தயாநிதிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

 நிபந்தனை முன் ஜாமீன்

நிபந்தனை முன் ஜாமீன்

தயாநிதிமாறன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்காத நேரத்தில், அவருடைய முன் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை சி.பி.ஐ அணுகலாம் என்று குறிப்பிட்டு முன் ஜாமீன் வழங்கினார் நீதிபதி.

 சி.பி.ஐ.விசாரணை

சி.பி.ஐ.விசாரணை

கடந்த 1ம் தேதி 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 2ம் தேதியும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. சி.பி.ஐ அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்துக்கொண்டு கேட்ட கேள்விகளுக்கு தயாநிதிமாறனால் பதில் அளிக்க முடியவில்லையாம். அப்போது அவரிடம் சுமார் 35 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த விசாரணையின் போது தாயாநிதி மாறன் தரப்பில் சில ஆவணங்கள் ஆதாரங்களாக அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 சட்ட விரோதம் இல்லை

சட்ட விரோதம் இல்லை

விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், எதிர்காலத்திலும் எப்போது அழைத்தாலும் வந்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று உறுதியளித்தேன். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றிடம் இருந்து தகவல் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்களை எனது தரப்பு ஆதாரமாக அதிகாரிகளிடம் காட்டினேன். அதில், எனது பெயரில் ஒரு "ஐஎஸ்டிஎன்' இணைப்பு மட்டும்தான் இருந்தது. சுமார் 300 தொலைபேசி இணைப்புகளை நான் வைத்திருந்ததாகக் கூறுவது தவறு என்பதை நிரூபிக்கும் விவரம் இடம் பெற்றதை அதிகாரிகளிடம் காட்டி விளக்கினேன் என்றார் மாறன்.

 மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது தயாநிதி மாறன் அளித்த பதில் திருப்தி அளிக்காததால், தயாநிதி மாறனை மீண்டும் விசாரணைக்கு அழைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், மாறனின் எழுத்துபூர்வமான அறிக்கையை ஆராய்ந்த பிறகு, இது பற்றி முடிவு எடுக்கப்படும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன் ஜாமீன் தேதி முடிந்ததும், மிகப் பெரிய அதிர்ச்சியை தயாநிதி மாறனுக்கு சி.பி.ஐ அளிக்கும் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Former telecom minister Dayanidhi Maran was "evasive" during his questioning by CBI in a case of alleged abuse of his office in getting installed high capacity BSNL lines at his residences to facilitate speedy transmission of programmes to a TV firm owned by his brother and could be called again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X