For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கே இந்த 20 "தேச துரோகிகள்".. லிஸ்ட் போட்டு தேடும் டெல்லி போலீஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சர்ச்சைக்குரியதாக கருதப்படும் விழாவில் கலந்து கொண்ட 20 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியலை டெல்லி போலீஸார் தயாரித்துள்ளனர். இந்த 20 பேரும் தேச துரோகிகள் என்று டெல்லி போலீஸ் வர்ணித்துள்ளது. இவர்களைக் கைது செய்ய நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

பிப்ரவரி 9ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவின்போது இந்தியாவுக்கு எதிராக கோஷம் போட்டவர்களிடையே இவர்களும் இருந்தனராம். இவர்களைத்தான் தேடி வருவதாக போலீஸார் கூறுகிறார்கள்.

சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட 12 வீடியோ பதிவுகளை வைத்து இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

இவர்கள் குறித்து கன்யா குமார், அனிர்பன் பட்டச்சார்யா, உமர் காலித் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் இவர்களைப் பற்றித் தெரியாது என்று கூறி விட்டனராம். மேலும் கன்யா கூறுகையில், நான் விழாவின் கடைசிக் கட்டத்தில்தான் அங்கு வந்தேன். இந்த நபர்கள் யார் என்ற விவரம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளாராம்.

எனவே இந்த 20 பேரும் பல்கலைக்கழகத்தைச் சேராதவர்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் போல ஊடுறுவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை சிறப்புப் பிரிவுக்கு டெல்லி போலீஸார் மாற்றியுள்ளனர்.

English summary
Delhi police has launched a manhunt for 20 "anti-nationals" regarding the JNU issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X