For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி பஸ்களில் இனி பெண் “மார்ஷல்கள்” – வாலாட்டினால் அதோகதிதான்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த தகவலை டெல்லி மாநில போக்குவரத்துறை அமைச்சர் கோபால் ராய் கூறினார்.

Delhi government to deploy marshals in city buses

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"இதற்காக அரசு முதல் கட்டமாக 2 ஆயிரத்து 500 பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.

அவர்கள் குழுக்களாக பிரிந்து பஸ்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், ஒரு குழுவில் 3 முதல் 4 பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்றும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வசதியாக வாக்கி டாக்கி வழங்கப்படும்" என்றும் அவர் கூறினார்.

மேலும் அனைத்து அரசு பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு உள்ளதாகவும், முதல் கட்டமாக 200 அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

English summary
In order to ensure security of women in public transport, Delhi Government has decided to deploy 2,500 marshals in buses plying in the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X