For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாம் முஸ்லீமாக இருந்தும் சிறந்த தேசியவாதியாக இருந்தார்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

By Siva
Google Oneindia Tamil News

கலாம் முஸ்லீமாக இருந்தும் சிறந்த தேசியவாதியாக இருந்தார்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

டெல்லி: முஸ்லீமாக இருந்தபோதிலும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறந்த தேசியவாதியாக இருந்துள்ளார் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா.

'Despite' being Muslim, Kalam was great nationalist, says Union Minister Mahesh Sharma

டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என்று பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் இதற்கு டெல்லி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அந்த சாலைக்கு கலாம் பெயரை வைக்க டெல்லி மாநகராட்சி கடந்த மாதம் 28ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என்று பெயர் மாற்றியுள்ளோம். அவர் முஸ்லீமாக இருந்தபோதிலும் சிறந்த தேசியவாதியாக இருந்தார் என்றார்.

நம் நாட்டை கலாச்சார மாசில் இருந்து காப்பாற்றி மாணவர்களுக்கு ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Culture Minister Mahesh Sharma has triggered a row by saying that late president APJ Abdul Kalam was a great nationalist "despite" being a Muslim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X