For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

22 வயதில் கவுன்சிலர், 27ல் மேயர், 44ல் மகாராஷ்டிரா முதல்வர் ஆவாரா தேவேந்திர பட்னாவிஸ்?

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக நாக்பூர் எம்.எல்.ஏ. தேவேந்திர பட்னாவிஸ் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்(44) முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தான் போட்டியிட்ட தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் யார் இந்த பட்னாவிஸ் என்று பார்ப்போம்

சட்ட பட்டதாரி

சட்ட பட்டதாரி

ஜன சங் உறுப்பினராக இருந்த கங்காதர்ராவ் பட்னாவிஸின் மகனான தேவேந்திர பட்னாவிஸ் சட்டம் பயின்றுவிட்டு, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தார். 1989ம் ஆண்டு பாஜகவின் மாணவர் அணியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை துவங்கினார்.

கவுன்சிலர், மேயர்

கவுன்சிலர், மேயர்

22 வயதிலேயே தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் மாநகராட்சியின் கவுன்சிலர் ஆனார். பின்னர் 27 வயதில் 1997ம் ஆண்டில் அவர் நாக்பூரின் மேயர் ஆனார். இளம் வயதில் நாக்பூரின் மேயர் ஆனவர் தேவேந்திர பட்னாவிஸ்.

பிராமணர்

பிராமணர்

தேவேந்திர பட்னாவிஸ் ஒரு பிராமணர். மகாராஷ்டிராவில் இதுவரை ஒரேயொரு பிராமணர் தான் முதல்வராக இருந்துள்ளார். அவர் தான் மனோகர் ஜோஷி

ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ்.

நேர்மையானவர் என்று பெயர் பெற்ற தேவேந்திர பட்னாவிஸ் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Maharashtra BJP president Devendra Fadnavis leads the CM candidate race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X