For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெயின் காளை சண்டை vs ஜல்லிக்கட்டு.. வித்தியாசம் இவ்வளவுதாங்க! அப்படியும் தடை ஏன்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை சண்டை உலக பிரசித்தி பெற்றது. சிவப்பு வண்ண ஆடையை காண்பித்தபடி காளையை கொஞ்சம், கொஞ்சமாக குத்தி கிழித்து கொன்றுபோடும் வீரரை பார்க்க மக்கள் குவிவது வாடிக்கை.

ஆனால் வருடம் முழுக்க நடைபெறும் அந்த போட்டியை அனுமதிக்கும் சர்வதேச சமூகம், தமிழகத்தில் நடைபெறும் வதையற்ற ஒரு ஜல்லிக்கட்டு காளை போட்டிக்கு எதிராக திரள்வதன் பின்னணி ஆராயப்பட வேண்டியது.

ஸ்பெயின் காளை சண்டைக்கும், நம்மூர் ஜல்லிக்கட்டும் மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம் உள்ளது. இதுபற்றிய ஒப்பீடுகள் சமூக தளங்களில் பரவி வருகின்றன.

Differences between Spain bull fights and the Jallikattu

அதை பாருங்கள்:

ஸ்பெயின் காளை சண்டை:

  • காளையை கொன்று அடக்குபவன் வீரன்
  • ஆயுதங்கள் உபயோகிக்க அனுமதி உண்டு
  • காளை கொல்லப்படும்போதுதான் ஆட்டம் முடியும்
  • காளை வெற்றி பெற இதில் வாய்ப்பே கிடையாது
  • போட்டி முடிவில் அனைத்து காளைகளும் கொல்லப்படும்
  • ஆண்டு முழுக்கவும் இப்போட்டிகள் நடக்கின்றன.
  • வன்மம், போர்குணமும் இப்போட்டியால் அதிகரிக்கிறது
  • ஸ்பெயின் அரசாங்கம் இப்போட்டிகளுக்கு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்துகிறது.
Differences between Spain bull fights and the Jallikattu

தமிழ்நாடு, ஜல்லிக்கட்டு:

  • காளையை அரவணைத்து அடக்குபவனே வீரன்
  • எந்தவித ஆயுதங்களுக்கும் அனுமதி கிடையாது
  • காளை எல்லைக்கோட்டை கடந்துவிட்டாலே ஆட்டம் முடிந்துவிடும்
  • ஜல்லிக்கட்டில் வெற்றி வாய்ப்பு காளைக்கும் கொடுக்கப்படுகிறது
  • ஆட்டத்தின் முடிவில் காளைகளுக்கு வழிபாடு நடைபெறும்
  • ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பண்பாட்டு விழா
  • ஜல்லிக்கட்டு போட்டியால் அன்பும், வீரமும் வெளிப்படுகிறது
  • ஜல்லிக்கட்டு நடத்திவிடாமல் அரசு தடுத்து நிறுத்துகிறது
English summary
Differences between Spain bull fights and the Jallikattu are given above.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X