For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிகப் பயங்கரமான நிலநடுக்கம் காத்திருக்கிறது.. உத்தரகாண்ட்டுக்கு எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய - ஆஸ்திரேலிய நிபுணர்கள் குழு உத்தரகண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த மாநிலத்தில் ஓடும் பகிரதி, அலக்நந்தா, காயி ஆகிய 3 நதி படுகைகள் உள்பட பல்வேறு இடங்களிலும் ஆராய்ச்சி மையத்திலும் அந்தக் குழு ஆய்வு செய்தது.

அதில் கடந்த 700 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் இயற்கைக்கு எதிராக நடைபெற்று வரும் தவறுகளிள் காரணமாக, நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று இந்திய - ஆஸ்திரேலிய நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.

Earthquake unseen in centuries could strike Uttarakhand, experts say in grim forecast

இதுகுறித்து பேசிய ஜவகர்லால் நேரு அன்பான்ஸ்டு சயின்டிபிக் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ராஜேந்திரா, " கடந்த 500, 700 ஆண்டுகளாக உத்தரகண்டில் இயற்கைக்கு எதிராக நடைபெற்று வரும் நடவடிக்கைகளின் காரணமாக, நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும்", என்று தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையின் காரணமாக அம்மாநில மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இருப்பினும் இந்த எச்சரிக்கையினால் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

நிலநடுக்கம் குறித்து முழுமையாக கணிக்க முடியாது என்றாலும், ஏற்கனவே நிகழ்ந்த நிலநடுக்கங்களின் அடிப்படையில் ஓரளவுக்கு அதனை தெரிந்துகொள்ள முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 2 ஆய்வு முடிவுகளிலும் உத்தரகண்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 8000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். முன்னதாக இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
New research partly funded by the Indian government to forecast earthquakes has made a grim prediction: a great quake never seen in centuries could strike Uttarakhand, an area home to 10 million people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X